அவளுக்கு அவன்...
உயிர் வாசம்
தீண்டும் உன்னத உறவு…
காதல் வாசமில்லா
கண்ணிய உறவு…..
அவளுக்குள் இருக்கும் ஆண்மையாய்
அவன்...
அவனுக்குள் இருக்கும் பெண்மையாய் அவள்…
அவள் எழுத்தின் உயிர்ப்பாய் அவன்..
அவன் எழுத்தின் இயக்கமாய் அவள்..
அவள் நட்பின் இலக்கணமாய் அவன்.
அவன் நட்பின் காதலாய் அவள்.
அவள் மனதில் தமிழாய் அவன்
அவன் மனதில் தேவதையாய் அவள்.
அவளுக்கு புரியாத புதிர் அவன்
அவனுக்கு விடை தேடும் விந்தை அவள்.
அவனும் அவளும்
தோழனும் தோழியுமாய்..
6 comments:
அந்த 'அவன்' கொடுத்து வைத்தவன்!!! வாழ்க பல்லாண்டு இன்று போல் என்றும்.
அந்த'avan' கொடுத்து வைத்தவன்.
வாழ்க பல்லாண்டு இன்று போல் என்றும்!!!
உங்கள் கவிதைகள் மிகவும் அர்த்தம் உள்ள,ஆழமான, உயிருள்ள வரிகள்.அதற்கு அடிமை நான். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.❤️
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
Thank you
Thank you
Post a Comment